×

மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்த ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ நிகழ்ச்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்

சென்னை: மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்த ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார். பெண்களிடையே தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று கிண்டி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்தது. இதை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்.

பிறகு அவர் பேசும்போது, “மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ2877.43 கோடி செலவில் ரோபோட்டிக்ஸ், அட்வான்ஸ்டு சி.என்.சி, மெக்கானிக் மின்சார வாகனங்கள் போன்ற தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தியுள்ளது. இத்தகைய உலக தரம் வாய்ந்த முன்னோடி பயிற்சிகளை பெற்று தங்களது திறனை உயர்த்தி அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை மாணவிகள் பெற முடியும்’’ என்றார்.

The post மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்த ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ நிகழ்ச்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister CV Ganesan ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...