×

கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற கூடாது: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கோயம்பேடு சந்தையை மூடிவிட்டு திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை சிஎம்டிஏ கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு சந்தையில் 3000 கடைகள் இருந்தாலும் கூட, அவற்றில் ஐந்தாயிரத்திற்கும் கூடுதலான வணிகர்கள் காய்கறிகள், பழங்களை வணிகம் செய்கின்றனர். மேலும், கிட்டத்தட்ட பத்தாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மறைமுகமாக வேலை பெறும் மக்களையும் கணக்கில் கொண்டால், கிட்டத்தட்ட ஒரு லட்சம் குடும்பங்கள் கோயம்பேடு சந்தையை நம்பியுள்ளன. பலர் வாழ்வாதாரம் இழப்பார்கள்.

திருமழிசையில் இருந்து காய்கறி எடுத்து வந்தால் செலவு அதிகமாகும். அதனால், சென்னை மக்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும். எனவே, வணிகர்கள், தொழிலாளர்கள், சென்னை மாநகர மக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் திட்டத்தை சி.எம்.டி.ஏ கைவிட வேண்டும். வணிக மையம் அமைக்கும் திட்டத்தை சென்னையின் வேறு பகுதிகளில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்ற கூடாது: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Thirumazhisai ,Anbumani ,CHENNAI ,CMDA ,BAMAK ,Tirumashisai ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள்...