×

போலி சான்றிதழ்: அங்கன்வாடி பணியாளர் சஸ்பென்ட்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கும்மிடிப்பூண்டி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் செயல்படும் புது கும்மிடிப்பூண்டி கிழக்கு 1 மையத்தில் அங்கன்வாடி பணியாளராக சந்தோஷ் மேரி பணியாற்றி வந்தார். இந்நிலையில் சந்தோஷ் மேரி என்பவரின் கல்வி சான்றான பள்ளி மாற்று சான்று உண்மை தன்மையற்றது என பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிற்கு புகார் தெரிவித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தனியார் போலியான கல்வி சான்று சமர்ப்பித்து அரசுத்துறையை ஏமாற்றிய சந்தோஷ் மேரி என்ற அங்கன்வாடி பணியாளரை வேலை இல்லை சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு விதிமுறைகளை பின்பற்றி சந்தோஷ் மேரியை பணியில் இருந்து விடுவித்து அதன் விவரத்தினை அலுவலகத்திற்கு தெரிவிக்கும்படியும் அரசு விதிமுறைகளின் படி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் கும்மிடிப்பூண்டி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.

The post போலி சான்றிதழ்: அங்கன்வாடி பணியாளர் சஸ்பென்ட் appeared first on Dinakaran.

Tags : Ankanwadi ,Thiruvallur ,Thiruvallur District ,Anganwadi ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...