×

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

பொன்னேரி: மணலி புதுநகர் ஜெயகோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 157 மாணவ, மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை துரை சந்திரசேகர் எம்எல்ஏ நேற்று வழங்கினார். இவருடன் சென்னை மாநகராட்சி 15 வார்டு உறுப்பினர் நந்தினி சண்முகம், வட்ட செயலாளர் அங்குசாமி, தலைமை ஆசிரியர் செல்லாம்மள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் செந்தில், வகிதாமோகன் மற்றும் திமுக நிர்வாகிகள் செல்வம், கோபாலகிருஷ்ணன், அத்திப்பட்டு புருஷோத்தமன் வல்லூர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Manali Pudunagar Jayagopal Garodia Government High School ,
× RELATED பழவேற்காடு கடற்கரையில் தேங்கியுள்ள...