×

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு; எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் கைது சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். அமலாக்கத்துறை காவல் விசாரணை முடிவடைந்த பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி ஆஜர்படுத்தபட்ட அவரை ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையையும், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் 28ம் ேததி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு; எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்: முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Principal Sessions Court ,Chennai ,Minister Senthil Balaji ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு...