×

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், முதற்கட்டமாக காஞ்சிபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நாளை (19.8.2023) காலை 10 மணி முதல் 1 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில், குடும்ப அட்டை – நகல், ஆதார் அட்டை – நகல், பாஸ்போர்ட் அளவிலான 4 புகைப்படம் ஆகியவையுடன் அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டு பயனடையலாம். மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம் என்ற முகவரியிலும், 044-2999 8040 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டும் விவரங்கள் அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Disabled ,Medical ,Camp ,Kanchipuram ,District ,Collector ,Kalachelvi Mohan ,Handicapped ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...