×

மரக்கன்றுகள் நடும் விழா

ஸ்ரீபெரும்புதூர்: சுற்றுசூழல் பாதுகாக்க குண்ணம் ஊராட்சியில் உள்ள அரசு அலுவலகங்கள், நீர்நிலைகளின் அருகில் மரக்கன்றுகள் நடவு செய்ய ஊராட்சி மன்றம் சார்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி குண்ணம் அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 250 மரக்கன்றுகள் மற்றும் வண்ணான் குளத்தை சுற்றி 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் குண்ணம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் இலக்கியா பார்த்திபன் கலந்துகொண்டு, மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார். இதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

The post மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Sapling ceremony ,Sriperumbudur ,Kunnam ,Dinakaran ,
× RELATED மரக்கன்று நடும் விழா