
எஸ்.ஏ பொறியியல் கல்லூரி 25 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வெற்றி சூழலை உருவாக்கி வருகிறது. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அறிவு, வசதியான கல்வி சூழல், அதிநவீன உள்கட்டமைப்பு, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 சிறப்பு மையங்களை கொண்டுள்ளது. ஹேக்கத்தான்கள், மாநாடுகள், மாணவர்களின் அறிவை வளர்க்கின்றன. ஒரு தனித்துவமான மற்றும் புதுமையான தொழில்துறை ஒத்துழைப்புடன் கூடிய கல்வி மற்றும் பயிற்சி முறை மேற்கொள்ளப்படுகிறது. 90% வேலை வாய்ப்பு, சில மாணவர்களுக்கு 15எல் பேக்கேஜ் வேலை வாய்ப்பு என, வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருகிறது. 18 கிரெடிட் படிப்புகளை முடித்தால் இளங்கலை பட்டத்துடன் சிறு பட்டத்தையும் ஈட்டித்தருகிறது.
கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் மாணவர்களுக்கு நிர்வாகத்தால் விருது மற்றும் வெகுமதி அளிக்கப்படுகிறது. DST, DST-FIST, MSME, TNSTC போன்றவற்றின் மூலம் 34 ஆராய்ச்சி மானியங்கள் ரூ.8.83 கோடி நிதி திரட்டியுள்ளது. கூட்டுக் கற்றல் மற்றும் திறன் அடிப்படையிலான கல்வி ஆகியவை இந்நிறுவன நடைமுறையின் முக்கிய அணுகுமுறைகளாகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகிய புதிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனம் மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.
The post 25 ஆண்டு கல்வி சேவையில் எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி appeared first on Dinakaran.