×

செங்கம் டவுன் மாமல்லன் நகரில் மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி, கொடி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாதனங்கள் பழுதடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ேமலும் வியாபாரிகளும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு மின்கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்திருப்பது உள்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக செங்கம் டவுன் மாமல்லன் நகரில் உள்ள ஒரு மின் கம்பம் முழுவதும் செடி, கொடிகள் சூழ்ந்து வளர்ந்துள்ளது.

இதனால் மின் கம்பமே தெரியாத நிலை காணப்படுகிறது. இந்த செடி, கொடிகளை மேய ஆடு, மாடுகள் அங்கு வருகின்றன. எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தால் இவை இறந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும் அவ்வழியாக செல்பவர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள், இந்த மின்கம்பத்தில் உள்ள செடி, கொடிகை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்கம் டவுன் மாமல்லன் நகரில் மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி, கொடி appeared first on Dinakaran.

Tags : Chenjam Town Mamallan ,Chenjam ,Thiruvannamalai district ,Chenjamalai district ,Chenum Town ,Mamallan City ,
× RELATED செங்கம் செய்யாற்றில் ஆக்கிரமிப்புகள்...