×

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று இரவு ஆடி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அங்காளம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரமாக மகா சாம்ராஜ்ய தயானி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியபோது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா தாயே என பக்திகோஷத்துடன் கையில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோயில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்ற பின் உற்சவர் அங்காளம்மனை திருக்கோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Adi Month New Moon ,Angalamman Temple ,Malayanur ,Anangalamman Temple ,Viluppuram district ,Audi ,Month New Moon ,Melmalayanur ,
× RELATED மயிலாடுதுறை சித்தர்காட்டில் அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்