×

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக

டெல்லி: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 21 பேர், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு 39 பேர் பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடபட்டுள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபை தேர்தலுக்கு 21 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும், 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபைக்கு 39 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும் பாஜக அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து வரும் 5 மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை தவிர்க்க முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுடன் சத்தீஷ்கார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன. மிசோரமில், மணிப்பூர் கலவரத்தை அடுத்து, கூட்டணிக் கட்சி மற்றும் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணியுடனான பா.ஜனதாவின் கூட்டணி முறிந்துள்ளது குறிப்பிடதக்கது.

The post சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக appeared first on Dinakaran.

Tags : bajaka ,Madhidya Pradesh ,Chhattiscar ,Delhi ,Madhara Pradesh ,Chhattisagar ,Madhea Pradesh ,Chatdiskar ,Chhattisgarh ,
× RELATED பாஜக எம்.பி.க்கள் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவு..!!