×

மினி கூப்பர் எஸ்இ சார்ஜ்டு

மினி கூப்பர் நிறுவனம், எஸ்இ சார்ஜ்டு எடிஷன் என்ற ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 184 எச்பி பவரையும் , 270 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 32.6 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. 100 கி.மீ வேகத்தை 7.3 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கி.மீ தூரம் வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காருடன் 11 கிலோவாட் சார்ஜர் வழங்கப்படும். இதன் மூலம் இரண்டரை மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். 2.3 கிலோவாட் சார்ஜர் பயன்படுத்தினால் முழுமையாக சார்ஜ் செய்ய 9 மணி நேரம் 43 நிமிடங்கள் ஆகும். ஷோரூம் விலை சுமார் ரூ.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்டாண்டர்டு மாடலை விட ₹2.5 லட்சம் அதிகமாகும்.
இந்த சார்ஜ்டு எடிஷன், சிவப்பு நிறத்தில் மட்டும் வருகிறது.

கூரை வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டிருக்கும். உட்புறம் முழுவதும் கருப்பு நிற தீம் உடன் வடிவமைக்கப்பட்டிருக்கும். 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே, 5.5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட கிளஸ்டர் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

The post மினி கூப்பர் எஸ்இ சார்ஜ்டு appeared first on Dinakaran.

Tags : Mini ,Mini Cooper Company ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் குப்பைகளை சேகரிக்க 7 மினி லாரிகள்