×

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் நாளை திறப்பு

திண்டுக்கல்: பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலா தளங்கள் நாளை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பராமரிப்பு பணி காரணமாக மறு உத்தரவு வரும் வரை முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் இந்த‌ சுற்றுலாத‌ல‌ங்கள் அனைத்தையும் கண்டு ரசிப்பது வழக்கம்.

இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், ஆர்.சி, காப்பீட்டு சான்றிதழ், மாசு சான்றிதழ் போன்ற அடையாள அட்டைகள் இருந்தால் மட்டுமே வனப்பகுதிக்குள் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக, பேரிஜம் ஏரிக்கு செல்ல ஒருநாளைக்கு 50 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

The post பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் நாளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dintugul ,Dindukal District Kodicanal ,Dinakaran ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்