×

3 கஞ்சா செடிகளை வீட்டிலே வளர்க்கலாம்: கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க ஜெர்மனி அரசு முயற்சி

பெர்லின்: கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க ஜெர்மனி அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. 2024-ம் ஆண்டு முதல் ஜெர்மனியில் கஞ்சாவை வாங்குவதையும், கஞ்சா தாவரத்தை வளர்ப்பதையும் எளிதாக்கும் மசோதாவுக்கு ஜெர்மன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் போதைப்பொருள் சட்டத்தால் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்பட உள்ள நிலையில் மசோதா சட்டமானால் ஜெர்மனியில் ஒருவர் 25 கிராம் வரை கஞ்சாவை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இருப்பினும் தனி நபர்கள் வீடுகளில் 3 கஞ்சா செடிகளுக்கு மேல் வளர்க்க அனுமதி கிடையாது. கஞ்சா சட்ட விதிகள் திருத்த சட்ட மசோதாவுக்கு ஜெர்மன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தாலும் இது முழு அளவில் சட்டமாக மேலவைகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பாவில் மிகவும் தாராளவாத கஞ்சா சட்டங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜெர்மனி மாறும்.

The post 3 கஞ்சா செடிகளை வீட்டிலே வளர்க்கலாம்: கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க ஜெர்மனி அரசு முயற்சி appeared first on Dinakaran.

Tags : German government ,Berlin ,Germany ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…