×

விசிக தலைவர் திருமாவளவனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாள் வாழ்த்து.!

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ள்ட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆதித்தொல் குடியில் எளிய குடும்பத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடி, தனது கூர்மையான மதிநுட்பத்தாலும், மங்காதப் போர்க்குணத்தாலும் உருவான சுயம்புத்தலைவன். சாதிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் சனாதனத்திற்கு எதிராகக் கருத்தியலாக சண்டையிடும் சமத்துவப்போராளி!.

தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காக அயராது களத்தில் நிற்கிற தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை. விடுதலைச்சிறுத்தைகளின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்பிற்கினிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடர பேரன்பினைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post விசிக தலைவர் திருமாவளவனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்த நாள் வாழ்த்து.! appeared first on Dinakaran.

Tags : Tamilar Party ,chief coordinator ,Seeman ,Vishik ,Thirumavalavan ,CHENNAI ,Vichitham Tigers Party ,Dinakaran ,
× RELATED ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பூர்வகுடி...