×

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்!

டிபன் பாக்ஸில் தோசை வைப்பதற்கு முன்பு, அதன் மீது லேசாக தண்ணீர் தெளித்து அதன் மீது எண்ணெய் மிளகாய்ப் பொடி குழைத்து, பூசி பிறகு டிபன் பாக்ஸில் வைத்தால் சாஃப்டாக இருக்கும்.
 ஃப்ரீசரில் வெண்ணெய் வைத்து, அது கட்டியாகி விட்டால், அதை தோசைக் கல்லில் தேய்த்து தோசை சப்பாத்தி செய்தால் வெண்ணெய் சிறிதளவே செலவு ஆகும். வெண்ணெயும் சீராகப் பரவும்.
 குருமாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் அதில் ஒரு பிரட் ஸ்லைஸை மேலாகப் போட்டு, ஒரு நிமிடம் கழித்து எடுத்துப் போடவும். அதிகப்படியான நீர் உறிஞ்சப்பட்டு விடும்.
 தோசை மாவு குறைவாக இருந்தால் அதே அளவுக்கு அரிசி மாவு, சிறிது தேங்காய் துருவல், ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மாவைக் கரைத்து ஆப்பமாக ஊற்றினால் சாஃப்டாகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும்.
 தேங்காய் பொடி அரைக்க தேங்காய்க்கு பதில் கொப்பரையைச் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். மணமுடன் இருக்கும்.
 எண்ணெய் கத்திரிக்காயில் ஒரு ஸ்பூன் கெட்டித் தயிர் விட்டால் கத்தரிக்காய் கறுத்துப் போகாமல் இருக்கும்.
 இரண்டு பங்கு பயத்தம் பருப்பு, ஒரு பங்கு பச்சரிசி கலந்து ஊறவைத்து உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் கலந்து அரைத்து தோசை ஊற்றினால் தோசை சூப்பராக இருக்கும்.
 தேங்காயில் பால் பிழிந்து ஃபிரிட்ஜில் வைத்தால் கூட எளிதில் நீர்த்துப் போய் விடும். தேங்காயைத் துருவி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால் தேவையான போது பால் எடுத்துக் கொள்ளலாம். தேங்காய் பால் ஃப்ரஷ்ஷாக இருக்கும்.
 போளிக்கு பூரணம் செய்யும்போது சிறிது வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொண்டால் சுவை சூப்பராக இருக்கும்.
– அமுதா அசோக்ராஜா

The post குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்! appeared first on Dinakaran.

Tags : Kutty Kutty Home Tips ,Kutti ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...