×

சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிந்ததாக இஸ்ரோ ட்வீட்!

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிந்ததாக இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் உந்து விசை கலன் மற்றும் லேண்டர் இன்று தனியாக பிரிக்கப்பட்டது. விண்கலத்தில் இருந்து உந்து விசை கலன் அண்ட் லேண்டர் பிரிக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்படும். சந்திரயான்-3 நிலவின் சுற்றுப் பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், ISRO இணைந்து கண்காணிக்கும். நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கும் லேண்டர் படிப்படியாக உயரம் குறைக்கப்பட்டு ஆக.23ல் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3 விண்கலத்தை வடிவமைத்தது. ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி மதியம் 2.35 மணி 17 வினாடிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டரில் உள்ள நிலவை அடைய சந்திரயான் விண்கலத்திற்கு 40 நாட்கள் ஆகும். நிலவில் தரையிரங்கிய பின்னர் நிலவின் தென் பகுதியில் 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் சந்திரயான்-3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் முக்கிய பணி கடந்த 5ம் தேதி இரவு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் நீள்வட்டப்பாதையில் சுற்ற தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிந்ததாக இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் உந்து விசை கலன் மற்றும் லேண்டர் இன்று தனியாக பிரிக்கப்பட்டது. விண்கலத்தில் இருந்து உந்து விசை கலன் மற்றும் லேண்டர் பிரிக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் நிலை நிறுத்தப்படும். சந்திராயன்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிந்ததாக இஸ்ரோ ட்வீட்! appeared first on Dinakaran.

Tags : isro ,chandrayaan-3 ,vikram ,kalan ,Srihrikotta ,Vikram Lander ,Chandrayaan- ,Movu ,Shakti Kalan ,Modu Shakti Kalan ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...