×

ஆப்ரிக்க தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்து… 60க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலி; 38 பேர் உயிருடன் மீட்பு!!

கேப் வெர்டே : மேற்கு ஆப்ரிக்க நாடான செனெகலில் இருந்து சட்ட விரோதமாக கேனரி தீவுக்கு புலம் பெயர முயன்ற அகதிகளின் படகு நீரில் மூழ்கியதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஸ்பெயின் நாட்டில் சட்ட விரோதமாக குடியேறும் நோக்குடன் செனெகல் நாட்டில் இருந்து 131 பேர் படகு ஒன்றில் பயணித்தனர். அவர்களது படகு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஆப்ரிக்க தீவு நாடான கேப் வெர்டே அருகே வந்த போது, அதிக சுமை காரணமாக கடலில் மூழ்கியது. பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். தகவல் அறிந்து கேப் வெர்டே கடலோர காவல்படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர்.

நடுக்கடலில் உயிருக்கு போராடிய 38 பேரை அவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். இருப்பினும் இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 56 உடல்களை மீட்டுள்ள கேப் வெர்டே படையினர் எஞ்சிய உடல்களை தேடி வருகின்றனர். மீட்கப்பட்டோரை விசாரணை செய்து வரும் கேப் வெர்டே அதிகாரிகள் அவர்களை மீண்டும் செனெகல் நாட்டிற்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

The post ஆப்ரிக்க தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்து… 60க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலி; 38 பேர் உயிருடன் மீட்பு!! appeared first on Dinakaran.

Tags : Cape Verde ,Canary Islands ,African ,Senegal ,African island ,Dinakaran ,
× RELATED பசுமைப் போராளி…வான்காரி மாத்தாய்