×

மன அழுத்தத்துக்கு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பத்திரப்பதிவு ஐஜி சிவன் அருள் மனைவி பிளேடால் கழுத்து அறுத்து தற்கொலை: சென்னை ராயப்பேட்டையில் பரபரப்பு

சென்னை:கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சிவன் அருள். ஐஏஎஸ் அதிகாரியான இவர், தற்போது சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள பத்திரப்பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் ஐஜியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுமதி (53) என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகள் டாக்டராக பணியாற்றி வருகிறார். மகன் கல்லூரி ஒன்றில் கடல்சார் பொறியாளராக கல்விபடித்து வருகிறார். மகளுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.ஐஏஎஸ் அதிகாரியான சிவன் அருள், தற்போது ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கிருஷ்ணா அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிவன் அருள் நேற்று காலை வழக்கம் போல் அலுவலகம் சென்றுவிட்டார். மகனும் கல்லூரிக்கு சென்று விட்டார். வீட்டில் வேலைக்கார பெண் மற்றும் சுமதி மட்டும் இருந்துள்ளனர். 10 மணிக்கு மேல் சுமதி குளியல் அறைக்கு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வேலைக்கார பெண் குளியல் அறையின் கதவை பலமுறை தட்டி சுமதியை அழைத்துள்ளார். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அதிர்ச்சியடைந்த வேலைக்கார பெண், குடியிருப்பில் இருந்த நபர்களிடம் கூறியுள்ளார். அவர்கள் குளியல் அறையின் கதவை உடைத்து பார்த்த போது, சுமதி கழுத்து மற்றும் கையில் பிளேடால் அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலைக்கார பெண் மற்றும் குடியிருப்புவாசிகள் சம்பவம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சிவன் அருளுக்கு தகவல் கொடுத்தனர். ஐஸ் அவுஸ் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.இதை தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த சிவன் அருள் கூட்டத்தை ரத்து செய்து விட்டு வீட்டிற்கு விரைந்து வந்தார். மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதார். பிறகு போலீசார் சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனைவி பிளேடால்  கழுத்து மற்றும் கையில் அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐஏஎஸ் அதிகாரிகள்  வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கைப்பட எழுதிய கடிதம் சிக்கியதுதற்கொலை செய்துகொண்ட சுமதியின் படுக்கை அறையில் போலீசார் சோதனை நடத்திய போது, அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் ‘கடும் மன அழுத்தம் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை’ என்று எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், சுமதி மன அழுத்தம் காரணமாக கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததும், அதற்காக அவர் மாத்திரைகள் எடுத்து வந்ததும் தெரியவந்தது. சுமதிக்கு கடும் மன அழுத்தம் காரணமாக, அவரது மகள் டாக்டர் என்பதால் தேவையான அனைத்து உதவிகளையும் அவருக்கு செய்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி தனது தாய் சுமதியை அவர் வந்து கவனித்து வந்ததும் தெரியவந்தது. இருந்தாலும் போலீசார் சுமதி தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post மன அழுத்தத்துக்கு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பத்திரப்பதிவு ஐஜி சிவன் அருள் மனைவி பிளேடால் கழுத்து அறுத்து தற்கொலை: சென்னை ராயப்பேட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : IG ,Sivan Arul ,Rayapetta, Chennai. ,Chennai ,Shivan Arul ,Kallakurichi ,IAS ,Deeds Department ,Santhome ,Rayapetta, Chennai ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு