×

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்

ஒன்றிய அரசின் மினிரத்னா நிறுவனங்களில் ஒன்றான ஐஆர்இஎல் நிறுவனத்தில் 35 மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த இடங்கள்: 35 (பொது-14, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்சி-5, எஸ்டி-3, ஓபிசி-10)
பணி விவரம்:

1. MT- Technical: தகுதி மெக்கானிக்கல்/மைனிங்/எலக்ட்ரிக்கல்/கெமிக்கல்/மினரல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்.,
2. MT- HR; தகுதி: Human Resoruces Management/Personnel Management/Industrial Relations/Organizational Development/Human Resource Development ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி.
3. MT- Finane: தகுதி: சார்ட்டட் அக்கவுன்டென்ட்/காஸ்ட் அக்கவுன்டென்ட் படிப்பில் தேர்ச்சி அல்லது பி.காம்., தேர்ச்சியுடன் நிதி பாடத்தில் எம்பிஏ தேர்ச்சி.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது மற்றும் சம்பளம்:
வயது: 20.8.2023 அன்று 27க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

உதவித் தொகை: ரூ.57,000.
பயிற்சிக்குப் பின் சம்பளம்: ரூ.40,000-1,40,000.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் முக்கிய பாடப்பிரிவு மற்றும் பொது அறிவு, பொது ஆங்கிலம், ரீசனிங் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, நாகர்கோவிலில் தேர்வு நடத்தப்படும்.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www/jobapply.in/irel/2023/mt என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.8.2023.

The post ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் appeared first on Dinakaran.

Tags : Public Sector Agency of the Government of the Union ,IREL ,Miniratna ,Union Government ,Public Sector Institute of the Union ,Dinakaran ,
× RELATED ஐ.ஆர்.இ.எல் சார்பில் இலவச மருத்துவ முகாம்