×

திருவள்ளூர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் நடைபயிற்சி சென்ற போது வெட்டி படுகொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் நடைபயிற்சி சென்ற போது வெட்டி படுகொலை செய்யபட்டுள்ளார். 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வெட்டி கொலை செய்தது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாரிநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக இருந்தார். இவர் 2011-14 -ம் ஆண்டில் பாடிய நல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இன்று அதிகாலை சுமார் 6 மணியளவில் தனது வீட்டிற்கு அருகேவுள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் மைதானத்தில் நடைபயிற்ச்சி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 இருசக்கர வகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பலால் பார்திபன் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிசென்றதாக கூறபடுகிறது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் பார்த்திபனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்த்திபன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைகாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்த நிலையில், ஆவடி மாநகர காவல் ஆணையர் விஜயகுமார் நேரில் விசாரணை நடத்திவருகிறார்.

The post திருவள்ளூர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் நடைபயிற்சி சென்ற போது வெட்டி படுகொலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,panchayat ,Parthiban ,Tiruvallur ,Sengunram ,Tiruvallur district ,
× RELATED செங்கல்பட்டு அருகே அதிமுக முன்னாள்...