- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவாசன்
- சென்னை
- உதயநிதி ஸ்டாலின்
- தீழாகம்
- மீ GP கானிலங்கனி
- முதல்வர்.
- கெ ஸ்டாலின்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன்
![]()
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளையொட்டி திருமாவளவனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; சாதிய – மதவாத – சனாதன சக்திகளுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் – நாடாளுமன்றத்திலும் சமரசமற்ற போர்க்குரலை எழுப்பி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி INDIA-வை காப்பதற்கான போரில் அண்ணனின் பங்களிப்பும் – செயல்பாடுகளும் வெல்லட்டும்! இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இதேபோல் திமுக எம்.பி. கனிமொழியும் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; சனாதனத்திற்கு எதிரான சமூகநீதிப் போரில் தொடர்ந்து பங்காற்றி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சக நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி; இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து செய்தி; சமூகநீதிக்கான போராட்டத்தில் தீரத்தோடு களமாடும் என் அன்புச் சகோதரர் திருமாவனவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து. திருமாவளவன் நல்ல ஆரோக்யத்துடன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
The post விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து! appeared first on Dinakaran.

