×

தக்காளி விலை உயர்வைத் தொடர்ந்து அதிரடி அறிவிப்பு: பர்கர் கிங் இந்தியா உணவகங்களில் தக்காளி சேர்க்கப்பட்டது

சென்னை: பர்கர் கிங் இந்தியா உணவகங்களில் சிறுது காலத்துக்கு தக்காளி பயன்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தக்காளியின் விளைச்சல் குறைந்ததை அடுத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை பலமடங்கு அதிகரித்தது. தக்காளி கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டதால் மெக்டொனால்டு மற்றும் சுப்வேய் உள்ளிட்ட உணவகங்கள் சிறிது காலத்துக்கு தக்காளி பயன்படுத்தப்போவதில்லை என்று அறிவித்திருந்தன. தற்போது பர்கர் கிங் இந்தியா உணவகமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

தற்போதைய சூழலில் தக்காளியின் தரம் மற்றும் வரத்து குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் தங்களால் உணவில் தக்காளி சேர்க்கமுடியாது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. தரமான தக்காளி கிடைத்ததும் உணவில் தக்காளி சேர்க்கப்படும் என்பதால் அதுவரை வாடிக்கையாளர்கள் பொருமை காக்க வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. பர்கர் கிங் உணவகத்தின் சில கிளைகளில் தக்காளிக்கு கூட ஓய்வு தேவைப்படுகிறது என வேடிக்கையாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

The post தக்காளி விலை உயர்வைத் தொடர்ந்து அதிரடி அறிவிப்பு: பர்கர் கிங் இந்தியா உணவகங்களில் தக்காளி சேர்க்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Burger King India ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்