×

இமாச்சலில் இயற்கை கோரத்தாண்டவம்.. மண்ணோடு புதைந்த மக்கள்.. 71 பேர் பலி.. ரூ.10000 கோடி சேதம்!!

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் ஞாயிறு தொடங்கி கன மழை பெய்து வருகின்றது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சம்மர் ஹில், கிருஷ்ணா நகர் மற்றும் பாக்லி பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கினார்கள். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. சிம்லா உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இவற்றில் மாண்டி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளில் இமாச்சலில் மிகப்பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் சிம்லாவில் பகில் சம்மர் ஹில் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கிய 57 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மண்ணோடு மண்ணாக புதைந்து பலர் மாயமானதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.இதனிடையே மோசமான வானிலை காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களிலும் 19ம் தேதி வரை வகுப்புக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர்சிங் சுக்கு கூறியதாவது: நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இது போன்ற பேரழிவு இதற்கு முன் ஏற்பட்டது இல்லை. பாதிப்புகளை சரி செய்ய ஓராண்டு ஆண்டு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இமாச்சலில் இயற்கை கோரத்தாண்டவம்.. மண்ணோடு புதைந்த மக்கள்.. 71 பேர் பலி.. ரூ.10000 கோடி சேதம்!! appeared first on Dinakaran.

Tags : Natural ,Himachal ,Shimla ,Himachal Pradesh ,Imachal ,
× RELATED இயற்கை நல உணவு பயிற்சி முகாம்