
தேனி, ஆக. 17: தேனி ராயல் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் இலங்கையில் நடந்த விழாவில் பொறுப்பேற்றுக் கொண்டனர். தேனி ராயல் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இலங்கையில் உள்ள பாணந்துரை கடற்கரையில் நடந்தது. இவ்விழாவில் தேனி ராயல் அரிமா சங்க தலைவராக வக்கீல் செல்வகுமார், செயலாளராக பொன்ராஜ், பொருளாளராக வெற்றிவேல் ஆகியோரும் ஆக்டிவிட்டி செயலாளராக ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.
புதிய நிர்வாகிகளுக்கு அரிமா மாவட்ட ஆளுநர் ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில், ராயல் அரிமா சங்க நிர்வாகிகளான சன்னாசி, முத்து கோவிந்தன், ஜெகநாதன்,குமார், சுப்பையா, டாக்டர் செல்வ கணேசன், பெஸ்ட் ரவி. இளஞ்செழியன் , ரவீந்திரநாத், ரமேஷ் குமார், சரவணன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகளின் குடும்பத்தினர் விழாவில் கலந்து கொண்டனர்.
The post தேனி ராயல் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.