×

சிறந்த நிர்வாக திறமைக்காக பரிசு பெற்றதற்கு கம்பம் எம்எல்ஏவிடம் சின்னமனூர் ஒன்றிய குழுத்தலைவர், சேர்மன் வாழ்த்து

கம்பம், ஆக. 17: சிறந்த நிர்வாக திறமைக்காக கலெக்டரிடம் பரிசுபெற்ற சின்னமனூர் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் நகர் மன்ற தலைவர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர். தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் சிறப்பாக பணி மேற்கொண்டமைக்காகவும், சிறந்த நிர்வாக திறமைக்காகவும், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கும், அதுபோல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியினை சிறப்பாக மேற்கொண்டமைக்காகவும், சிறந்த நிர்வாக திறமைக்காகவும், சின்னமனூர் நகராட்சிக்கும், தேனியில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் ஷஜீவனா பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இதையடுத்து கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்ற சின்னமனூர் ஒன்றிய குழுத்தலைவர் மற்றும் தேனி மாவட்ட மண்டல திட்டக்குழு நிவேதா அண்ணாதுரை, நகர்மன்ற தலைவர் அய்யம்மாள், சின்னமனூர் நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம், கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் முத்துக்குமார், கூடலூர் நகர செயலாளர் லோகந்துரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கம்பம் சாதிக், அனுமந்தன்பட்டி பேரூர் செயலாளர் ராஜ்குமார், பால்பாண்டி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிறந்த நிர்வாக திறமைக்காக பரிசு பெற்றதற்கு கம்பம் எம்எல்ஏவிடம் சின்னமனூர் ஒன்றிய குழுத்தலைவர், சேர்மன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chinnamanur Union Committee ,Gampam MLA ,Kambam ,City Council ,MLA ,Dinakaran ,
× RELATED கம்பம் அருகே 80 வயது மூதாட்டி பலாத்கார முயற்சி: வாலிபருக்கு போலீசார் வலை