×

விராலிமலை இலுப்பூர், பாக்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

விராலிமலை, ஆக.17: இலுப்பூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இலுப்பூர், ஆலத்தூர், பேயல்,கிளிக்குடி, எண்ணை.தளிஞ்சி,வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (வியாழன்) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதேபோல் பாக்குடி துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி,பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி,மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர்,ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் (பொ)வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

விராலிமலை பகுதிகள்: விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான விராலிமலை, விராலூர், மலைக்குடிபட்டி, ராஜளிபட்டி, கொடும்பாளூர், விட்டமாபட்டி, பாட்னாபட்டி, கவரபட்டி, செவல்பட்டி, செட்டியபட்டி, கோட்டைகாரன்பட்டி, கோமங்களம், தேன்கனியூர், சீத்தப்பட்டி, பொய்யாமணி,நம்பம்பட்டி, செவனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று விராலிமலை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post விராலிமலை இலுப்பூர், பாக்குடி பகுதியில் இன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Viralimalai Ilupur ,Pakkudi ,Viralimalai ,Ilupur ,Aladhur ,Payal ,Klikkudi ,Ente ,Talinchi ,Veerapatti ,Cuttakadu ,Malaikudipatti ,
× RELATED விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி