×

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

 

கோபி, ஆக.17: கோபி அருகே உள்ள நம்பியூர் சமுதாய நலக்கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நம்பியூர் கிளை 3வது வட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நம்பியூர் வட்ட கிளை தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வட்ட துணைத்தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். இணைச்செயலாளர் பழனிச்சாமி தொடக்கவுரையாற்றினார். நம்பியூர் வட்ட செயலாளர் கருப்புசாமி வேலை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

அரசு துறையில் காலியாக உள்ள 4.50 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நம்பியூர் தாலுகாவில் தலைமை மருத்துவமனை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொருளாளர் சண்முகம், உட்கோட்ட தலைவர் குருசாமி, அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் ராதாமணி, தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகி ரகு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Gobi ,Tamil Nadu Government Employees Union Nambiur Branch ,Nambiur Community Welfare ,Center ,Dinakaran ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு