×

பு.புளியம்பட்டி நகர திமுக சார்பில் அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி

 

சத்தியமங்கலம், ஆக.17: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புஞ்சை புளியம்பட்டி நகர திமுக சார்பில் அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. புஞ்சைபுளியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பயன்பாட்டிற்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தன்னிறைவு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் புதிய கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் புதிய கலையரங்க கட்டிடத்திற்கு நன்கொடை நிதியாக புஞ்சை புளியம்பட்டி நகர திமுக சார்பில் நகர செயலாளரும், நகராட்சி துணைத்தலைவருமான பி.ஏ.சிதம்பரம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையனிடம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன், நகராட்சி தலைவர் ஜனார்த்தனன், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் முத்துக்குமார், டாக்டர் சுப்பிரமணியம், பள்ளி தலைமை ஆசிரியை உமா கெளரி, நகர செயற்குழு உறுப்பினர் சந்தான பாரதி, யசோதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பு.புளியம்பட்டி நகர திமுக சார்பில் அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : DMK ,Puliambatti ,Sathyamangalam ,Punjai ,Puliambatti City DMK ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை