×

மகளிர் உலக கோப்பை கால்பந்து பைனலில் இங்கிலாந்து: ஆஸ்திரேலியா ஏமாற்றம்

சிட்னி: மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. சிட்னி, ‘அரங்கம் ஆஸ்திரேலியா’வில் நேற்று நடந்த 2வது அரையிறுதியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 36வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் டூனி எல்லா அபாரமாக கோல் அடித்து அந்த அணிக்கு 1-0 என முன்னிலை கொடுத்தார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. 2வது பாதியில் ஆஸ்திரேலியாவின் சாம் கெர் 63வது நிமிடத்தில் பதில் கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, தாக்குதலை தீவிரப்படுத்திய இங்கிலாந்து அணிக்கு லாரன் ஹெம்ப் 71வது நிமிடத்திலும், அலெஸ்ஸியோ ரூஸோ 86வது நிமிடத்திலும் கோல் அடிக்க, அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று பைனலுக்கு முன்னேறியது. ஆக. 19ம் தேதி நடக்கும் 3வது இடத்துக்கான போட்டியில் ஸ்வீடன் – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டி ஆக.20ல் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

The post மகளிர் உலக கோப்பை கால்பந்து பைனலில் இங்கிலாந்து: ஆஸ்திரேலியா ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : England ,Australia ,Women's World Cup ,Sydney ,Women's World Cup football ,Dinakaran ,
× RELATED மகளிர் உலக கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு