×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சாம்பியன் கார்சியாவை வீழ்த்தினார் ஸ்லோன்

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் வெஸ்டர்ஸ் மற்றும் சதர்ன் சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட உள்ளூர் நட்சத்திரம் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தகுதி பெற்றார். நேரடியாக 2வது சுற்றில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் கரோலினா கார்சியாவுடன் (29 வயது, 6வது ரேங்க்) மோதிய ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (30 வயது, 38வது ரேங்க்) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 20 நிமிடம் போராடி வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனைகள் பெத்ரா குவித்தோவா (செக்.), டாரியா கசட்கினா (ரஷ்யா), யெலனா ஓஸ்டபென்கோ (லாத்வியா), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் 2வது சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் களமிறங்கிய ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கரஸ் (20வயது, 1வது ரேங்க்) 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டன் தாம்சனை (29வயது, 55வது ரேங்க்) வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 2 நிமிடத்துக்கு நீடித்தது.

The post சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் சாம்பியன் கார்சியாவை வீழ்த்தினார் ஸ்லோன் appeared first on Dinakaran.

Tags : Sloan ,Cincinnati Open ,Garcia ,Cincinnati ,Westerns ,Southern Cincinnati Open ,United States ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா