×

ஸ்மார்ட் வாட்ச்சிலும் வந்திடுச்சு கியூஆர் கோடு!: பெங்களூருவை கலக்கும் ஆட்டோ ஓட்டுநர்

டிஜிட்டல் இந்தியாவின் விளைவாக மக்கள் பணத்தை கையில் வைத்து பயன்படுத்துவது வெகுவாக குறைந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலம் கியூஆர் கோடு ஸ்கேன் செய்துதான் பணப்பரிமாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த கியூஆர் கோடு ஸ்கேன் செய்வதிலும், ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர் ஈர்த்துள்ளார். ஐடி நகரமான பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவரது ஸ்மார்ட்வாட்ச்சின் ஸ்க்ரீன்சேவரில் கியூஆர் கோடை வைத்திருக்கிறார்.

அவரது ஆட்டோவில் பயணித்த பெண், கட்டணம் செலுத்துவதற்காக யுபிஐ கியூஆர் கோடை கேட்க, ஆட்டோ ஓட்டுநர் ஸ்மார்ட்வாட்ச்சை காட்டியுள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் ஸ்மார்ட்டான செயலை கண்டு வியப்படைந்த அந்த பெண், இதுதொடர்பாக டிவிட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்தார். அதைக்கண்ட டிவிட்டர் பயனாளர்கள், அந்த ஆட்டோ ஓட்டுநரின் சாமர்த்தியமான சிந்தனையை வெகுவாக பாராட்டி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை பதிவிடப்பட்ட இந்த டிவீட்டை 3,56,000 பேர் பார்த்துள்ளனர். 7,400 லைக்குகளை பெற்றுள்ளது.

The post ஸ்மார்ட் வாட்ச்சிலும் வந்திடுச்சு கியூஆர் கோடு!: பெங்களூருவை கலக்கும் ஆட்டோ ஓட்டுநர் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,India ,UPI ,Dinakaran ,
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு