×

அரியானாவில் கைது செய்யப்பட்ட பசு பாதுகாவலருக்கும் பஜ்ரங் தளத்துக்கும் தொடர்பு இல்லை: விஷ்வ இந்து பரிஷத் அறிவிப்பு

புதுடெல்லி: அரியானாவில் ஜூன் 31ம் தேதி விஷ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக பசுபாதுகாவலர் பிட்டு பஜ்ராங்கி செவ்வாயன்று கைது செய்யப்பட்டார். உதவி காவல் கண்காணிப்பாளர் உஷா அளித்த புகாரின்பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பசுகாவலர் பிட்டு பஜ்ராங்கிக்கும், விஎச்பி.யின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஎச்பி தெரிவித்துள்ளது. இது குறித்து விஎச்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பஜரங் தளத்தின் தொண்டர் என்று கூறிக்கொள்ளும் ராஜ்குமார் என்கிற பிட்டு பஜ்ராங்கிக்கும் பஜ்ரங் தளத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவின் உள்ளடகத்தை பொருத்தமானது என்று கருதவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அரியானாவில் கைது செய்யப்பட்ட பசு பாதுகாவலருக்கும் பஜ்ரங் தளத்துக்கும் தொடர்பு இல்லை: விஷ்வ இந்து பரிஷத் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Haryana ,Vishwa Hindu Parishad ,New Delhi ,Bajrang Dal ,Vishwa ,Hindu Parishad ,Dinakaran ,
× RELATED அரியானாவில் பாஜ வேட்பாளரை விரட்டியடித்த விவசாயிகள்