×

கே.எஸ்.அழகிரி ஆவேசம்: மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற நினைக்கிறார் மோடி

சென்னை: மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற மோடி நினைக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: நாட்டில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் ஊழலே காரணம். கரையான்களைப் போல ஊழல் நாட்டின் அமைப்புகளை அரிக்கிறது என்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார்.ஊழலை ஒழிக்க வந்த மனிதப் புனிதராக வேடமேற்று, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று 2024ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு நான் தான் வருவேன் என்று திரும்ப திரும்ப கூறுகிறார்.

ஆனால், திறமையற்ற நிர்வாகத்தினாலும் 2024ம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றி பெற முடியாத நிலையை உருவாக்க ராகுல்காந்தி எடுத்த முயற்சியின் விளைவாக மகத்தான ‘இந்தியா’ கூட்டணி உருவாகியிருக்கிறது. இந்த கூட்டணியினுடைய கடும் முயற்சியின் காரணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதைப் போல, அடுத்தமுறை பிரதமராக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை மோடிக்கு நாட்டு மக்கள் நிச்சயம் வழங்க மாட்டார்கள்.

The post கே.எஸ்.அழகிரி ஆவேசம்: மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற நினைக்கிறார் மோடி appeared first on Dinakaran.

Tags : KS ,Modi ,Chennai ,Congress ,KS Azhagiri ,KS Alagiri ,
× RELATED வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை...