×

தமிழ்நாடு முழுவதும் உள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு: 4 ஆண்டுகளில் 169 குளங்களை தூர்வாரி இளைஞர்கள் அசத்தல்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் சேர்ந்து நான்கு ஆண்இளைஞர்கள் டுகளில் 169 குளங்களை தூர்வாரி அசத்தியுள்ளனர். 170குளம் தூர்வாரும் பணியில் தீவிரம் காட்டிவரும் இளைஞர்கள் முப்போகு சாகுபடி செய்துவந்த காவேரி டெல்டா விவசாயிகள் தற்போது ஒரு போக சாகுபடிக்கே தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக 2018ம் ஆண்டு தாக்கிய கஜா புயலால் பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவசத்திரம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதில் இருந்து மீண்டு வர 2019ம் ஆண்டு பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய நான்கு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி கைஃபா என்ற கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாய சங்கத்தினை தொடங்கினர். தங்கள் ஊரில் உள்ள குளத்தை சீர் செய்யும் பணியை அவர்கள் முதல் முறையாக ஒன்றிணைந்து மேற்கொண்டனர். அன்று முதல் தங்கள் சேவையை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் இந்த குழு இணைந்து 169 ஏறி குளங்களை தூர்வாறியுள்ளது. இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி மாவட்ட விவசாயிகள் பலனடைந்து உள்ளனர்.

தற்போது 170வதாக பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூரில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட புது ஏரியை தூர்வாறும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் மற்றும் முன்னாள் நீதிபதி பாரதிதாசன் ஆகியோர் தொடங்கி வைத்து பாராட்டினர். அடுத்த 2 ஆண்டுகளில் 1000 ஏறி குளங்களை தூர்வாரி பாசன வசதியை ஏற்படுத்திட இந்த சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். இது போன்ற மாநிலம் முழுவதும் நீர் நிலைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் ஒன்றுகூடினால் தமிழ்நாட்டிலுள்ள அணைத்து ஏரி குளங்களுக்கு புத்துயிர் கொடுக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் உள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு: 4 ஆண்டுகளில் 169 குளங்களை தூர்வாரி இளைஞர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Pattukottai ,Tamilnadu ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு...