×

பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை; இந்தியாவே வீடு: காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதில்

டெல்லி: பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்றும் இந்தியா தான்அவரது வீடு என்பதால் அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் அவர் தேசியக்கொடி ஏற்றுவார் என்றும் அதிமுக எம்.பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினத்தில் பங்கேற்க வந்த அதிமுக எம்பி தம்பிதுரையிடம் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தம்பிதுரை பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை எனவே இந்தியா தான் அவரது வீடு என்பதால் அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் தான் அவர் தேசிய கொடி ஏற்றுவார் என்றும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின் போது அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டின் சாதனைகளை பட்டியலிடுவேன் என்று பேசியதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருந்தார். 2024ல் பிரதமர் மோடி மீண்டும் தேசிய கொடியை ஏற்றுவதாக இருந்தால் அவரது வீட்டில் தான் ஏற்றமுடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தான் கார்கேவுக்கு அதிமுக எம்.பி தம்பிதுரை இவ்வாறு பதிலளித்துள்ளார்.

The post பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை; இந்தியாவே வீடு: காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதில் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,India ,Thambidurai ,Congress ,Karke ,Delhi ,Modi ,Shekott ,Tambithurai ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...