×

காரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

துரைப்பாக்கம்: காரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலை மாநகர பேருந்துக்காக காத்திருந்த பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த 36 வயது இளம்பெண், காரப்பாக்கத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று மாலை வீடு திரும்புவதற்காக, காரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் மாநகர பேருந்துக்கு காத்திருந்தார்.

இதேபோல் அங்கு 10க்கும் மேற்பட்ட இளம்பெண்களும் மாநகர பேருந்துக்கு காத்திருந்தனர். அப்போது கஞ்சா போதையில் வந்த வாலிபர் ஒருவர், அங்கு நின்றிருந்த பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை கிண்டியை சேர்ந்த இளம்பெண் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவரிடமும் அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை வாலிபரை மடக்கி பிடித்து சரமாரி தாக்கியுள்ளனர். பின்னர் அவரை கண்ணகி நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், பிடிபட்ட வாலிபர் காரப்பாக்கத்தை சேர்ந்த பவானி (28) எனத் தெரியவந்தது. இப்புகாரின்பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பவானியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Karapakkam ,Durai Pakkam ,
× RELATED லீசுக்கு வீடு விடுவதாக கூறி கோடிக் கணக்கில் மோசடி: தம்பதி மீது புகார்