×

முறையான வாடகை நிர்ணயம் செய்ய கோரி பெரம்பலூரில் 1,500 டிப்பர் லாரிகள் ஸ்டிரைக்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 108 கிரஷர்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 1500 டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கல் குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கருங்கற்கள், சரளை கற்கள், கிரஷர்களில் தயாரிக்கப்படும் ஜல்லி கற்கள், சிப்ஸ், எம்சாண்டு, நைஸ் உள்ளிட்ட கட்டுமான பணிக்கு தேவையான மூலப்பொருட்கள் டெல்டா மாவட்டங்கள் அனைத்திற்கும் இங்கு இருந்து தான் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் அதிக பாரம் ஏற்றுவதை நிறுத்தி சரியான அளவு ஏற்றி சரியான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டி இன்று முதல் ஒருங்கிணைந்த பெரம்பலூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து டிப்பர் லாரிகளை இயக்காமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளனர்.

இதனையொட்டி இன்று காலை 6 மணி முதல் பெரம்பலூர் 4 ரோடு ஐஸ்வர்யா நகர் பகுதியில் டிப்பர் லாரிகளை இயக்காமல் சாலையில் அணிவகுத்து நிறுத்தி உள்ளனர். டிப்பர் லாரிகளை இயக்காமல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகத்தின் 10க்கு மேற்பட்ட மாவட்டங்களில் கட்டு மானப் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post முறையான வாடகை நிர்ணயம் செய்ய கோரி பெரம்பலூரில் 1,500 டிப்பர் லாரிகள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Dinakaran ,
× RELATED அடுத்த 4 நாட்களுக்கு வெப்பத்தின்...