×

ஹிஜாவு நிறுவனத்திற்காக செயல்பட்ட துணை நிறுவன இயக்குநர் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஹிஜாவு நிறுவனத்திற்காக செயல்பட்ட துணை நிறுவன இயக்குநர் கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபசி செய்தது. ரூ.4620 கோடி அளவில் முதலீடு பெற்று மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கலைச்செல்வி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஹிஜாவு நிறுவனத்திற்காக முதலீடுகளை ஈர்த்து கனவர் பெயரில் நடத்தபட்ட நிறுவனத்தில் இருந்து முதலீடுகளை பெற்றதாக கலைசெல்வி மீது வழக்கு பதிவு செய்ய்பட்டு கைது செய்யபட்டார். ஏப்ரல் மாதம் தக்கல் செய்யபட்ட இவரது ஜாமீன் மனு சிறப்பு நீதிமன்றத்தல் தள்ளுபடி செய்யபட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் 81,000 முதலீட்டளர்களிடமிருந்து ரூ.4,620 கோடி முதலீடுகளை பெற்றுள்ளதாகவும், 16,500 பேர் புகார் அளித்துள்ளதாகவும், தெரிவிக்கபட்டது. 40 பேர் மீது குற்றம் சாட்டபட்டுள்ள இந்த வழக்கில் ஜாமீன் வழங்கினால், குற்றம் சாட்டபட்டுள்ள மற்றவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்ககூடாது என தெரிவிக்கபட்டது. இதனை ஏற்றுகொண்ட நீதிபதி இளந்திரையன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post ஹிஜாவு நிறுவனத்திற்காக செயல்பட்ட துணை நிறுவன இயக்குநர் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hijavu ,Chennai High Court ,CHENNAI ,Madras High Court ,Kalaichelvi ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...