×

புதிய அணியில் இணைந்தார் கால்பந்து ஜாம்பவான் நெய்மர்: அல் ஹிலாலுக்கு 2023 முதல் 2025 வரை விளையாட ஒப்பந்தம்

சவுதி அரேபியா: பிரேசில் கால்பந்து அணியின் முன்கள வீரரும் நட்சத்திர வீரர்களில் ஒருவருமான நெய்மர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் விலகி அல் ஹிலால் கால்பந்து அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து அணிக்காக நெய்மர் விளையாடுவார் என்று சவுதி புரோ லீக் தெரிவித்திருக்கிறது.

2025ல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக கால்பந்து சம்மேளனமான FIFA நடத்தும் கால்பந்து போட்டியில் அல் ஹிலால் அணிக்காக நெய்மர் விளையாடுவார். எவ்வளவு தொகைக்கு நெய்மர் விளையாடுவார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் 9010 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெய்மர் பிரான்சில் உள்ள (PSG)எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கால்பந்து கிளப்பிற்காக 6 ஆண்டுகள் விளையாடி வந்தார். ஏற்கனவே சௌதியரேபியாவில் உள்ள பிரபல கால்பந்து கிளப்புகளில் உலகின் முன்னணி கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானா ரொனால்டோ, பிரான்ஸின் கரீம் பென்சிமா ஆகியோர் இணைந்துள்ளனர். போர்ச்சுகளின் ரொனால்டோ, அல்நசர் என்ற சௌதிகிளப் அணியில் விளையாடி வருகிறார். அந்த வரிசையில் தற்போது நெய்மரும் அரேபிய கால்பந்து அணியில் சேர்ந்துள்ளார்.

The post புதிய அணியில் இணைந்தார் கால்பந்து ஜாம்பவான் நெய்மர்: அல் ஹிலாலுக்கு 2023 முதல் 2025 வரை விளையாட ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Neymar ,Al Hilal ,Saudi Arabia ,Brazil ,Paris Saint-Germain ,Al… ,Dinakaran ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!