×

போலந்து அரசு நடத்திய மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பு: 92 விமானங்கள், 2,000 துருப்புகளின் வண்ணமிகு அணிவகுப்பு

போலந்து: ஐரோப்பிய நாடான போலந்து நேற்று தனது ராணுவத்தினத்தை ஒட்டி மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் அங்கமாகவும் தனது எல்லைகளை பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுடன் பகிர்ந்துகொள்ளும் போலன் நேற்று மிக பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்தியது. ஐரோப்பாவின் முன்னணி சக்திகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள போலன் கடந்த வாரம் தனது கிழக்கு எல்லையில் ஆயிரக்கணக்கான துருப்புகளை நிறுத்தியது.

பெலாரஸில் வாக்னர் கூலிப்படைகள் இருப்பதால் இந்த நகர்வு கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில் 92 போர் விமானங்கள் 2 ஆயிரம் துருப்புகளுடன் நடத்தப்பட்ட பிரமாண்ட அணிவகுப்பு பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அணிவகுப்பில் அமெரிக்காவில் இருந்து போலந்து வாங்கிய டாங்கிகள் தென்கொரியாவில் இருந்து வாங்கிய ராக்கெட் லாஞ்சர்கள் முன்வரிசையில் வந்தன. என்வே இந்த அணிவகுப்பு ரஷ்யாவுக்கு எதிரான செய்தியாக பார்க்கப்படும் நிலையில் உள்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலுக்காகவும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

The post போலந்து அரசு நடத்திய மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பு: 92 விமானங்கள், 2,000 துருப்புகளின் வண்ணமிகு அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Largest military parade ,Polish government ,Poland ,NATO ,aircraft ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா முன்னேற்றம்