×

இந்த ஆண்டு 10,000 சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்த ஆண்டு 10,000 சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திஷா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகள் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திட்டங்களை கண்காணிக்க, மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு குழு (திஷா) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சுய உதவிக் குழுக்களுக்கு இந்தாண்டில் ரூ.25,000 கோடி நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10,000 சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10,000 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சுழல்நிதி வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3,000 கிராம ஒழிப்பு சங்கங்களுக்கு வறுமை குறைப்பு நிதியாக ரூ.7.50 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்சியர் அலுவலகங்களிலும் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் உணவகங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்க மதி என்ற வாகனம் வழங்கப்படும். அனைத்து மக்களுக்கும் நன்மை தரும் திட்டத்தை சிறிதும் தாமதம் இன்றி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டங்களை கண்காணித்தால்தான் அது தொடந்து தொய்வின்றி நடைபெறும் என தெரிவித்தார்.

The post இந்த ஆண்டு 10,000 சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. Stalin ,Chennai ,MC ,MCM ,
× RELATED அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை...