×

அட்டாரி , வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி :இந்தியா , பாகிஸ்தான் மக்கள் கண்டு களிப்பு!!

வாகா : பஞ்சாப் மாநிலம் அட்டாரி , வாகா எல்லையில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியை இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியாக இந்தியாவின் அட்டாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதி இருநாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் தினமும் சந்திக்கும் பகுதியாக இருக்கிறது. இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படை வீரர்களும் அவரவர் நாட்டு தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக் கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலகளவு மிகவும் பிரபலமானதாகும்.

இந்த நிலையில், 77வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் மிடுக்குடன் வீரநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வண்ணமயமான அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினார். அப்போது அங்கு திரண்டு இருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பி வாழ்த்தியதோடு, இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர். ஜெய் ஹிந்த் என்ற முழக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு மக்கள் உற்சாக குரல்களை எழுப்பினர். இதே போல பாகிஸ்தான் பொது மக்கள் முழக்கம் எழுப்பி அந்த நாட்டின் வீரர்களை உற்சாகப்படுத்தினர். வாகா எல்லையில் இரு நாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

The post அட்டாரி , வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி :இந்தியா , பாகிஸ்தான் மக்கள் கண்டு களிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Atari ,National Flag Dying Show ,Wagha Border ,India, Pakistan ,Wagha ,Punjab ,Attari ,India ,Border ,
× RELATED பாகிஸ்தானில் இருந்து அட்டாரி - வாகா...