×

நடராஜர் கோயில் 152 அடி உயர கோபுரத்தில் தேசிய கொடி

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடராஜருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் மேள தாளங்களுடன் சென்று காலை 8 மணிக்கு தேசிய கொடியை வெள்ளி தாம்பாளத்தில் வைத்து, சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான் பாதத்தில் சமர்ப்பித்து சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது.இதை தொடர்ந்து 152 அடி உயர கிழக்கு சன்னதி கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. கடந்த 1950ம் ஆண்டு முதல், சுதந்திர தினத்தன்று இக்கோயிலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post நடராஜர் கோயில் 152 அடி உயர கோபுரத்தில் தேசிய கொடி appeared first on Dinakaran.

Tags : Natarajar Temple ,Chidambaram ,Natarajar ,Independence Day ,Chidambaram, Cuddalore District ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...