×

சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய சிறைகளில் இருந்து 19 தண்டனை கைதிகள் விடுதலை

சென்னை: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புழல் உள்ளிட்ட 4 மத்திய சிறைகளில் இருந்து பல்வேறு வழக்கில் தண்டனை பெற்ற 19 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு குற்றங்களின் அடிப்படையில் 66 சதவீதம் தண்டனையை அனுபவித்த கைதிகளை ஆய்வு செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் சென்னை புழல் மத்திய சிறையில் 10 கைதிகள், கடலூர் மத்திய சிறையில் 4 கைதிகள், திருச்சி மத்திய சிறையில் 3 கைதிகள், வேலூர் மத்திய சிறையில் 2 கைதிகள் என மொத்தம் 19 கைதிகள் தனது குற்றத்திற்கான 66 சதவீதம் தண்டனையை நன்னடத்தையுடன் அனுபவித்துள்ளனர். இதையடுத்து 19 தண்டனை கைதிகள் சுதந்திர தினமான நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய சிறைகளில் இருந்து 19 தண்டனை கைதிகள் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Chennai ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...