×

ரூ156 கோடி லாபத்தில் செழிக்கும் சென்னை துறைமுகம்: துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல்

சென்னை: சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ரூ156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். 77 வது சுதந்திர தின விழா சென்னை துறைமுகத்தின் ஸ்ரீபாபு ஜெகஜீவன் ராம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் துறைமுகத் தலைவர் தலைவர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் மேடையில் கூறியதாவது: 142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் சீரான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல துறைமுகம் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் காரணமாக கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த நிதி ஆண்டில் ரூ 156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் வரை அமைக்கப்பட உள்ள ஈரடுக்கு மேம்பால திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் ரூ 1400
கோடி மதிப்பீட்டிலான பல்நோக்கு சரக்குகள் கையாளும் முனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. கன்டெய்னர் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் துறைமுகத்தின் முதல் நுழைவாயில் அருகே ரூ 52 கோடி செலவில் கூடுதல் லாரிகள் வாகன நிறுத்த முனையம் அமைக்கப்பட உள்ளது. துறைமுக மருத்துவமனையில் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் என 21 ஆயிரம் பேர் பயன் பெற்று வருகின்றனர்.

The post ரூ156 கோடி லாபத்தில் செழிக்கும் சென்னை துறைமுகம்: துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Port ,Port ,Sunil Paliwal ,Chennai ,Sunil ,
× RELATED தேசிய நெடுஞ்சாலை நிதி...