×

நாடு முழுவதும் 5.55 கோடி கழிவறை கட்டிய சுலப் நிறுவனர் காலமானார்

புதுடெல்லி: நாடு முழுவதும் 5.55 கோடி கழிவறை கட்டிய சுலப் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் நேற்று காலமானார். சமூக ஆர்வலரும், ‘சுலப் இன்டர்நேஷனல்’ நிறுவனருமான பிந்தேஷ்வர் பதக் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவரது வயது 80. நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றிய போது திடீரென மயக்கமடைந்து சரிந்தார். அவரை உடனே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மதியம் 1.42 மணிக்கு காலமானதாக அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கையால் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களின் அவலநிலையைப் போக்க விரிவான பிரசாரம் செய்தவர். மேலும் சுலப் என்கிற ஒரு புதுமையான வடிவமைப்பின் அடிப்படையில் கிட்டத்தட்ட 13 லட்சம் வீட்டுக் கழிப்பறைகளையும், 5.40 கோடி அரசுக் கழிப்பறைகளையும் கட்டியுள்ளார். மலிவான முறையில் இரண்டு குழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் இதை கட்டினார். மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்க அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்.

The post நாடு முழுவதும் 5.55 கோடி கழிவறை கட்டிய சுலப் நிறுவனர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Sulabh ,New Delhi ,Sulab ,Bindeshwar Pathak ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...