×

அரியானா கலவரத்தில் பசு பாதுகாவலர் கைது

குருகிராம்: அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கடந்த ஜூலை 31ம் தேதி விஷ்வ இந்து பரிசத் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது. இதில் 6 பேர் பலியானார்கள். பசுபாதுகாவலர் பிட்டு பஜ்ரங்கி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் இன்னொரு தரப்பினர் ஊர்வலத்தை மறித்தனர். அப்போது ஊர்வலத்தில் துப்பாக்கிகளுடன் வந்த பிட்டு பஜ்ரங்கி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் இருந்து ஏஎஸ்பி உஷா குண்டு ஆயுதங்களை பறித்து போலீஸ் வாகனத்தில் வைத்தார். ஆனால் அவர்கள் போலீசாரை மிரட்டி ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நூஹ் பகுதியில் நடந்த கலவரத்தில் தாக்குதல் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதையடுத்து பிட்டு பஜ்ரங்கி என்கிற ராஜ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பரிதாபாத்திற்கு அவரை கொண்டு சென்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். பிட்டு பஜ்ரங்கி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 148 (கலவரம்), 149 (சட்டவிரோத கூட்டம்), 332 (காயத்தை ஏற்படுத்துதல்), 353, 186 (பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 395 (ஆயுதத்துடன் மிரட்டுதல்) 397 (கொள்ளை),506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), ஆயுதச் சட்ட விதிகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரு சமூகத்தினரை மிரட்டும் நோக்கில் வீடியோ வெளியிட்ட பிட்டு பஜ்ரங்கி கூட்டாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

The post அரியானா கலவரத்தில் பசு பாதுகாவலர் கைது appeared first on Dinakaran.

Tags : Ariana riots ,Gurugram ,Nuh ,Ariana State ,Vishwa Hindu Parishad ,Dinakaran ,
× RELATED சட்ட விரோத உறுப்பு மாற்று அறுவை...