×

வெளிநாட்டினர் எவரெஸ்ட் ஏற கட்டணம் ரூ12 லட்சம்: நேபாள அரசு ஆலோசனை

காத்மண்டு: எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான ராயல்டி கட்டணத்தை ரூ12 லட்சமாக உயர்த்த நேபாள அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் 8,848.86 மீட்டர் உயரம் கொண்டது. எவரெஸ்ட் மலை உச்சிக்கு சென்று பலர் சாதனை படைத்துள்ளனர். இதில் ஏறுவதற்காக நேபாள அரசு ராயல்டி கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த ராயல்டி கட்டணம் கடந்த 2015ம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டது.

அதன்படி, வெளிநாட்டினர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான ராயல்டி கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ9.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ராயல்டி கட்டணத்தில் ரூ3.32 லட்சம் உயர்த்தி, வரும் 2025ம் ஆண்டில் இருந்து வெளிநாட்டினர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான கட்டணத்தை ரூ12.47 லட்சமாக நிர்ணயிக்க ஆலோசித்து வருவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

The post வெளிநாட்டினர் எவரெஸ்ட் ஏற கட்டணம் ரூ12 லட்சம்: நேபாள அரசு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Everest ,Nepal govt ,Kathmandu ,Nepalese ,Nepal government ,Dinakaran ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...