×

கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய தேர்பவனி: ஏராளமானோர் பங்கேற்பு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய 157ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கொடியை வட்டார அதிபர் அருட்தந்தை சிலுவை மைக்கேல் ராஜ், முதன்மை குரு ஜெரோம் ஏரோனிமுஸ் ஆகியோர் ஏற்றி வைத்தனர். கொடியேற்று விழாவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஒவ்வொரு நாளும் சலேத் அன்னை ஆலயத்தில் நடந்த நவநாள் திருப்பலி பூஜையில் பங்கு தந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நேற்று நடந்த திருப்பலி பூஜைக்கு மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார். அதன்பிறகு அன்னையின் மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. தேர்ப்பவனியில் ஏராளமானோர் ஜாதி, மத பாகுபாடின்றி கலந்து கொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு கொடைக்கானல் போலீஸ் டிஎஸ்பி மதுமதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பழனி, வத்தலக்குண்டு, திண்டுக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இரவு 9 மணிக்கு தொடங்கிய அன்னையின் மின் அலங்கார தேர்பவனி இன்று அதிகாலை மூஞ்சிகல் திரு இருதய ஆலயத்தை அடைந்தது.

அதனை தொடர்ந்து 12 மணிக்கு பகல் சக்கர பவானி மூஞ்சிகல் திரு இருதய ஆலயத்தில் இருந்து தொடங்கி சலேத் அன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது. 2 நாட்கள் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் சிலுவை மைக்கேல்ராஜ் தலைமையில் பங்கு பேரவையினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

The post கொடைக்கானலில் புனித சலேத் அன்னை ஆலய தேர்பவனி: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Holy ,Salet ,Mother's Shrine ,Kodaikanal ,Mother's Shrine of St. ,Kodaikanal, Dindukal District ,Saint ,
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து